தேங்கி கிடக்கும் காய்கறி கழிவுகள் மேலத்திப்பூந்துருத்தி வெள்ளாள தெருவில் கோயில் குளத்தை சுத்தப்படுத்திய பேரூராட்சி பணியாளர்கள்

திருவையாறு, ஜூன் 27: மேலத்திருப்பூந்துருத்தி வெள்ளாள தெருவில் கோயில் குளத்தை பேரூராட்சி பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி, தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நீர்நிலைகளை புனரமைக்க அதிகம் ஆர்வம் காட்டி அறிவுரை வழங்கியனர். இதையடுத்து திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி செயல் அலுவலர் குகன் முன்மாதிரியாக பேரூராட்சி அலுவலர்களை ஒன்று சேர்ந்த ஒரு குளத்தில் இறங்கி தூய்மை செய்து புனரமைக்கலாம் என முடிவு செய்தார். இந்த முன்னோடி நடவடிக்கைக்கு தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் குற்றாலிங்கம் அனுமதி அளித்தார்.மேலத்திப்பூந்துருத்தி பேரூராட்சி வெள்ளாள தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் குளம் கோடையில் வறண்டு செடி, கொடிகள் மண்டி கிடந்தது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு மழை பெய்தாலும் நீர் சேகாரமாகாத நிலையில் கால்வாய் பகுதிகள் தூர்ந்திருந்தது.பேரூராட்சி செயல் அலுவலர் குகன், இளநிலை உதவியாளர் ஜெயபால், வரிதண்டலர் ராஜசெல்வம், பம்ப் மெக்கானிக் மகேஸ்வரன், அலுவலக உதவியாளர் ராஜ்குமார், கணினி இயக்குபவர் கோவிந்த், திவ்யா, குடிநீர் திட்ட பணியாளர்கள் ஆகியோர குளத்தில் இறங்கி செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி அங்கிருந்த குப்பைகளை கொளுத்தினர். பேரூராட்சி நிர்வாகமே அதிரடியாக குளத்தில் இறங்கி சுத்தம் செய்வதை பார்த்த பொதுமக்கள், அலுவலர்களின் சேவையை பாராட்டினர்.

Related Stories: