ஓமலூரில் கொத்தமல்லி விலை உயர்வு

ஓமலூர், ஜூன் 26: ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் கொத்தமல்லி அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கிலோ ₹250க்கு விற்பனை செய்யபடுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழையும் பொய்த்து போனது. இதனால், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் நஞ்சை புஞ்சை ஆகிய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், விவசாயம் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகளை காக்கும் வகையில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிலையில் குறுகிய காலத்தில், குறைந்த நிலத்தில், குறைந்த நீரில் அதிக லாபம் தரும் கீரைகளை விதைக்க உதவிகளை செய்தனர்.

அதன்படி கொத்தமல்லி கீரையை காடையாம்பட்டி வட்டாரத்தில் குறைந்தளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள் விதைத்தனர். தற்போது கொத்தமல்லி கீரை நன்றாக வளர்ந்து அதிகளவிலான விளைச்சலை கொடுத்துள்ளது. மேலும், கொத்தமல்லி கீரையின் விலையும் பன்மடங்காக உயர்ந்து கிலோ ₹150தாக உள்ளது. மேலும், கொத்தமல்லி கீரை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலும் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், உள்ளுரில் விளைந்த கொத்தமல்லியை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.

கொத்தமல்லி வரத்து குறைந்ததால் நேற்று காலை ஓமலூர், தாரமங்கலம் தினசரி சந்தையில் கொத்தமல்லி கிலோ ₹250க்கு விற்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தென் மாவட்டங்களில் கொத்தமல்லி சாகுபடி குறைந்தது. தற்போது ஓசூரிலிருந்து கொத்தமல்லியை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். உள்ளுரிலும் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும், கொத்தமல்லி தேவை அதிகரித்துள்ளதால், கிலோவிற்கு ₹250 வரை வந்துள்ளது. கடந்த வாரம் ₹200க்கு விற்கப்பட்டது. மழை பெய்து கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, உள்ளுரில் கொத்தமல்லி சாகுபடி மீண்டும் தொடங்கும் என்றன

Related Stories: