அருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி சுகாதார துறையினர் நடவடிக்கை

அருப்புக்கோட்டை, ஜூன் 21: அருப்புக்கோட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதார பிரிவினர் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரத்பாபு, அய்யப்பன், இளங்கோ, சரவணன், பிச்சைப்பாண்டி, சுகாதார மேற்பர்வையாளர்கள் முத்துக்காமாட்சி, மார்த்தாண்டன், ஆகியோர் நகரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி, பூ மார்க்கெட், அண்ணாசிலை பகுதி ஜவுளிக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும்  100 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று பாலித்தீன் பைகளை பயன்படுத்தகூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: