அரிமளம் அருகே காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

திருமயம், ஜூன் 21: அரிமளம் அருகே கே.புதுப்பட்டி விசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில், சித்திவிநாயகர், பாலமுருகன், ஹரிஹர ஜயப்பன் கோயில் திருப்பணி வேலைகள் கடந்த மாதம் முடிவடைந்தது. விழாவையொட்டி கோயில் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 17ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 9.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கருவறையில் உள்ள விசாலாட்சி, காசிவிஸ்வநாதர், சித்தி வினாயகர், பாலமுருகன், ஹரிஹர ஜயப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், கே.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: