கலெக்டர் அதிரடி உத்தரவு திமுக கொடியேற்று விழா

வருசநாடு, ஜூன் 19: வருசநாடு கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினார். கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் ஜெயச்சந்திரன் ஆனந்தன் மாவட்ட விவசாய அணி செயலாளர் பவுன்ராஜ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன் மயிலாடும்பாறை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் தமிழரசன், தேசிங்குராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானசேகரன், மொக்கடாபாண்டியன், சின்னகாளை, மாடசாமி, மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் மருத்துவர் மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் வைகைசுப்பு, தங்கம்மாள்புரம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மந்திசுனை மூலக்கடை ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: