சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி

சேலம் ஜூன் 18: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் உள்ள பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பு இன்று (18ம்தேதி) தொடங்குகிறது.தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த ஆண்டு 1, 6, 9, மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நடப்பு கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10, மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், விலங்கியல் உட்பட்ட 9 பாடப்பிரிவுகளுக்கு 27 ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று(18ம் தேதி) முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் பணிவிடுப்பு வழங்க வேண்டும். மேலும் பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்,’’ என்றார்.

Advertising
Advertising

இதேபோல் சேலம் நகர்ப்புறம், ஆத்தூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு காரிப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், சேலம் ஊரகம், எடப்பாடி மற்றும் சங்ககிரி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு ஓமலூர் சிக்கனம்பட்டி தீரஜ்லால் காந்தி ெபாறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆங்கிலம், வேதியியல் மற்றும் கணிதம் பாடத்திற்கு ஜூன் 18, 19ம் தேதியும், தமிழ், இயற்பியல் மற்றும் தாவரவியல் பாடத்திற்கு ஜூன் 24, 25ம் தேதியும், விலங்கியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், மற்றும் கணினி அறிவியல் பாடத்திற்கு ஜூலை 1, 2ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தீரஜ்லால் காந்தி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலம், வேதியியல் மற்றும் கணிதம் பாடத்திற்கு   ஜூன் 20, 21ம் தேதியும், தமிழ், இயற்பியல் மற்றும் தாவரவியல் பாடத்திற்கு ஜூன் 26, 27ம் தேதியும் மற்றும் விலங்கியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ஜூலை 3, 4ம் தேதியும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: