குறிஞ்சி மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்திற்கான சிறப்பு முகாம்

சேலம், ஜூன் 18: சேலம் குறிஞ்சி மருத்துவமனையில், வரும் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதுகு தண்டுவடத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து குறிஞ்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: முதுகு வலி என்பது முதுகில் ஏற்படும் வலியுடன் நின்றுவிடாது. இதை கவனிக்காவிட்டால், சிலருக்கு முதுகு வலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலருக்கு குறுகிய தூரம் நடப்பது, சிறிதுநேரம் அமர்வது கூட கடினமாக இருக்கும். தண்டுவடத்தில் ஏற்படும அதிகப்படியான பாதிப்பால், சிலருக்கு கூன் விழலாம். சிலரால் தன் சொந்த வேலைகளை கூட செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு இயக்கம் முற்றிலும் பாதிப்பட்டு படுத்த படுக்கையாக நேரிடலாம். கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள தண்டுவட எலும்புகள், அதை சுற்றியுள்ள தசைகள், தசை நார்கள் மற்றும் அதன் உள்ளே இருக்கும் நரம்புகளின் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய வலிதான் முதுகுவலி.

Advertising
Advertising

 கழுத்தில் உள்ள எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள எலும்புகள், வயிற்றுப்பகுதியின் பின்புறம் உள்ள எலும்புகள் இவை அனைத்தும் இணைந்ததே முதுகுத்தண்டுவடம். இதில் ஏதேனும் சிறு பிரச்னைகள் தொடங்கி, பெரிய பிரச்னைகள் வரை ஏற்படுவதன் காரணத்தால், முதுகுவலி சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, ஆரம்ப காலத்திலேயே சரிசெய்ய வேண்டியது அவசியம். சுயமாக மருந்துகள் வாங்கி சாப்பிட்டால், பக்கவிளைவுகளோடு பிரச்னை அடுத்த கட்டத்துக்கு வளரும். குறிச்சி மருத்துவமனையில் வரும் 21ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு முதுகு வலியில் இருந்து மீளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: