ஆட்டையாம்பட்டி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆட்டையாம்பட்டி, ஜூன் 14:  வீரபாண்டி ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பூங்கொடி உத்தரவின் பேரில், வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 
Advertising
Advertising

முன்னதாக, ஆட்டையாம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ₹2,100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்த சோதனையில், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மாவட்ட நல கல்வியாளர் பிலவேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, ஆய்வாளர்கள் ஆறுமுகம், மாதேஸ்வரன், ராஜ்குமார், மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: