நெல்லையில் நிர்வாகி கொலை தூத்துக்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 14: நெல்லை ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் அசோக் கொலை சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை  சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி  சிதம்பரநகர் ஜங்சனில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்து பேசினார். இதில்  அசோக் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். அவரது  குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்ககோரியும் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் கண்ணன், மாநகர தலைவர்  காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர் பாலமுருகன், நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன்,  ஜேம்ஸ் மனோஜ், பிரபு சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், இந்திய  மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜாய்சன், மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஸ்பிக்நகர்: இதேபோல் முத்தையாபுரம் பல்க் பஜாரில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் டேனியல்ராஜ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக்கை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிகளை சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: