மழை, வெள்ளம், புயலால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு

சேலம், ஜூன் 13: தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மழை, வெள்ளம், புயல் ஏற்படும் மின் விபத்துக்கள் தவிர்ப்பது குறித்து மின்வாரியம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது. இதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை உடனடியாக அணுக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரியவீடு போன்ற கட்டிடங்களிலோ, வாகனங்களிலோ தஞ்சமடை வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையின் கீழே தஞ்சமடையக்கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும்.

தஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் அசம்பாவிதங்களை சரி செய்யும் இலவச சேவைக்கான தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. லேண்ட்லைன்-1912, அனைத்து அலைபேசி (செல்போன்)- 180042519122 போன்றவற்றில் தொடர்பு கொண்டு, எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தினால் அசம்பாவிதம் நேர்ந்தால் தகவல் தெரிவிக்கலாம்,’’ என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மின்பகிர்மான வட்ட தொடர்பு எண்கள்:

*மின்தடை பழுது நீக்கம் மையம்    -1. 0427-2414616

                                       - 2. 94458-57471

* மேற்பார்வை செயற்பொறியாளர்    - 94458-52300

* செயற்பொறியாளர் சேலம் நகரம்    - 94458-52090

* செயற்பொறியாளர் சேலம் கிழக்கு    - 94458-52310

* செயற்பொறியாளர் சேலம் மேற்கு    - 94458-52320

* செயற்பொறியாளர் சேலம் தெற்கு    - 94458-52330

* செயற்பொறியாளர் வாழப்பாடி    - 94458-52350

* செயற்பொறியாளர் ஆத்தூர்    - 94458-52340

மேட்டூர் மின்பகிர்மான வட்ட தொடர்பு எண்கள்:

* மேற்பார்வையாளர் மேட்டூர்    - 94458-52200

* மேட்டூர் செயற்பொறியாளர்    - 94458-52230

* ஓமலூர் செயற்பொறியாளர்    - 94458-52240

* சங்ககிரி செயற்பொறியாளர்    - 94458-52250

* எடப்பாடி செயற்பொறியாளர்    - 94459-79420

Related Stories: