திருச்செங்கோட்டில் ஜமாபந்தி நிறைவு

திருச்செங்கோடு, ஜூன் 13:  திருச்செங்கோடு வட்டத்திற்கான ஜமாபந்தி கடந்த 28ம்தேதி துவங்கியது. நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ மணிராஜ்  தலைமை வகித்து,  வருவாய் கிராமங்களின் வரவு கணக்குகளை ஆய்வு செய்தார்.  ஒவ்வொரு நாளும்  சம்பந்தப்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் வழங்கிய மனுக்களை ஆர்டிஓ பெற்றுக்கொண்டார். அதன்படி,  821 மனுக்கள் வரப்பெற்றன.  அதில் 56  மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று, ஆர்டிஓ  மணிராஜ்,  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பேருக்கு  ₹1.68 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  42 பேருக்கு  பட்டா மாறுதல் உத்தரவு மற்றும் நத்தம் பட்டா ஒருங்கிணைப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கதிர்வேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

Related Stories: