குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

முத்துப்பேட்டை, ஜூன்13 : வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் ஏராளம். இதேபோல் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வரும் சிறுவர்கள், நகரங்களில் உள்ள உணவகங்கள், கடைகள், வீடுகள் என வேலை பார்க்கும் நிலை உள்ளது. குறைந்த சம்பளத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வேலை பார்ப்பதையே நாம் குழந்தை தொழிலாளர் முறை என்கிறோம்.பள்ளிக்கு செல்லும் வயதிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 98 சதவீதம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், 100 சதவீதம் என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் தொழிலாளர் நலத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஜூன்12 (நேற்று) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்க்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்றனர். இதில் ஆசிரியர் மகாதேவன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

Related Stories: