நாகூர் தர்கா சாலையில்

நாகை, ஜூன்11: நாகூர் தர்கா சாலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் சிக்கித்தவிக்கின்றனர். நாகையில் நாகூர் மிகவும் முக்கியமான இடமாகும். இங்குள்ள தர்காவிற்கு பல தரப்பு மக்களும் பல நாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். நாகை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இந்த நாகூரில் தர்கா சாலையில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் இந்த நாகை மாவட்டத்தில் எப்படி இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வந்தது.

பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத அவலம் உள்ளது. நாகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் துப்புரவு பணிகள் சரியாக நடப்பது இல்லை. துப்புரவு பணிக்கு என்று நியமனம் செய்த பணியாளர்கள் நகராட்சி வாகன ஓட்டுநர்களாக பதவி வழங்கப்பட்டுள்ளது.  எனவே துப்புரவு பணியில் மெத்தனம் நீடிக்கிறது என்று தெரிவிக்கின்றனர். நாகூர் தர்கா சாலையில் பல மாதங்களாக அள்ளாமல் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளவில்லை என்றால் புழுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும். எனவே அங்கு குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளுவதுடன் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல் நாகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகூர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: