விருதுநகர், ஜூன் 11: விருதுநகர் அருகே, எரிச்சநத்தத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விருதுநகர் அருகே, எரிசநத்தத்தில் ஸ்ரீமசாணி அம்மன் தியான பீடம் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் நேற்று விசாரணை நடத்துவதாக அறிவித்து இருந்தார். இதனடிப்படையில், விருதுநகர் சிவன்கோயிலில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தியான பீடத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
