ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

சாத்தூர், டிச.19: ஒன்றிய அரசை கண்டித்து சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது. சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய நூறு நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது பொய் வழக்கு போட்ட ஒன்றிய அரசை கண்டித்தும் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் வடக்கு ரத வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்ஜோதிநிவாஸ், வட்டார தலைவர்கள் சுப்பையா, மாரிமுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: