அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சிங்கம்புணரி, ஜூன் 7: சிங்கம்புணரி அருகே புழுதிபட்டி வில்லியார் சுவாமி மற்றும் அரியநாச்சி அம்மன் கோவில்களில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடந்த செவ்வாய் கிழமை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. மூன்று நாட்கள் தினமும் ஆறு கால பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோபூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிவச்சாரியர்கள் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றினர்.

பின்னர் வில்லியார் மற்றும் அரியநாச்சி தெய்வங்களுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, பிரான்பட்டி, கணபதிபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: