தீமிதி உத்ஸவத்தையொட்டி கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம்

காரைக்கால், ஜூன்.4: காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவத்தையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் கீழகாசாக்குடியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தீமிதி உத்ஸவம் நிகழ்ச்சி 15 நாட்களுக்கு சிறப்பாக நடத்தபட்டு வருகிறது. இத்திருவிழா நடத்துவதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பந்தல் காலுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப்பின் கோயில் வாயிலில் கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் முன்னிலையில் பந்தல்கால் நடப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வரும் ஜூன் 7ம் தேதி பூச்சொரிதலுடன் உத்ஸவம் தொடங்குகிறது. ஒவ்வொரு சரகத்துக்குட்பட்ட தெருக்களுக்கு அம்மன் வீதியுலா தினமும் நடைபெறும்.ஜூன் 13ம் தேதி திருவிளக்கு வழிபாடும், 16ம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஜூன் 17ம் தேதி கோடீஸ்வரமுடையார் கோயில் அருகே தீமிதி வழிபாடு நடைபெறுகிறது. ஜூன் 18ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு நடத்தி ஜூன் 21ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவுபெறுகிறது.

Related Stories: