கற்பகநாதர்குளம் பிச்சைக்கொடை அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் சுவாமி வீதியுலா

முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் பிச்சைக்கொடை அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் சாமி வீதியுலா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் பிச்சைக்கொடை அய்யனார், சிங்கமா காளியம்மன், கற்பகவிநாயகர் பரிவார தெய்வங்களான சப்த கன்னிகள், முனீஸ்வரர், முன்னோடியார், தூண்டிக்காரர் கோயில் வைகாசி மாத திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

அதனை தொடர்ந்து காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிசேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் மாலை கற்பகநாதசுவாமி உடனுறை பாலசுந்தரி கோயிலிலிருந்து பிச்சைக்கொடை அய்யனார் சுவாமி வீதியுலா புறப்பட்டு முக்கிய பகுதிகளில் சென்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

பின்னர் சுவாமி வீதியுலா கோயிலை சென்றடைந்ததும் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. அதேபோல் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் சிறப்பு அபிசேக, ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி  கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: