கரூர் ராயனூர் 4 ரோடு சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?

கரூர், மே 29: கரூர் ராயனூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நவீன நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ராயனூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிழற்குடை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இருக்கை வசதி உட்ப டஎந்தவித வசதியும் இதில் இல்லை. மேலும், இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் படுத்துச் செல்வதால் அசுத்தமான நிலைக்கு மாறி பயணிகள் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது.

ராயனூர் பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், கோடங்கிப்பட்டி, பாகநத்தம், நந்தனு£ர், வால்காட்டுப்புது£ர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் இந்த நிழற்குடையின் அருகே காத்திருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேரூந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.

இந்நிலையில், ராயனூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் மற்ற இடங்களில் அமைக்கப்பட்டது போல, நவீன வசதிகள் கொண்ட நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை  விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: