திருச்செங்கோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செங்கோடு,  மே 29: திருச்செங்கோடு வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆண்டாய்வு   மூன்று கட்டங்களாக தனியார் கல்லூரிகளில் நடந்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. அவைகள் இறுதிக்கட்ட ஆய்வில் குறைகளை  நிவர்த்தி செய்து கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  இறுதிக்கட்ட ஆய்வு நேற்று திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வளாகத்தில்  நடந்தது. இதில் 148 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து  அலுவலர்  வெங்கடேசன், மோட்டார் வாகன ஆ்யவாளர்கள் ஈஸ்வரமூர்த்தி,  முத்துசாமி, குணசேகரன் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். வண்டிகளின்  பிளாட்பாரம் சரியாக  உள்ளதா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, பிரேக் சரிவர  இயங்குகிறதா, முதலுதவி சாதனங்கள் மற்றும் அவசரகால வழி உள்ளதா, டிரைவர்  உரிமம், பர்மிட், இன்சூரன்ஸ்  ஆகியவை நடப்பில் உள்ளதா என்று ஆய்வு  செய்யப்பட்டன. இதில் 2 வாகனங்கள் சில குறைபாடு காரணமாக தகுதி இழப்பு  செய்யப்பட்டன.தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவவலர் வெங்கடேசன்,   பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களிடம் விபத்து இல்லாமல் வாகனங்களை  ஓட்டுவது எப்படி, பணி  நேரத்தில் போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல்  போன்றவை குறித்து  அறிவுரை வழங்கினார்.

Related Stories: