ராணிப்பேட்டை அருகே அரச மர விழுதுகளை பாதுகாக்க பனைமரங்களை வைத்துள்ள கிராம மக்கள்

ராணிப்பேட்டை, மே 28: ராணிப்பேட்டை அருகே பெரியதாங்கல் கிராம மக்கள் வித்தியாசமான முறையில் அரச மர விழுதுகளை பாதுகாக்க பனைமரங்களை வைத்து பாதுகாத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதாங்கல் கிராமத்தில் உள்ள தெங்கால் பெல் சாலையில் பிள்ளையார் கோயில் எதிரில் பெரிய அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் தங்கியுள்ளன. மேலும் தெங்கால் பெல் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் இந்த அரச மரத்தின்கீழ் சிறிது நேரம் தங்கிவிட்டும் பிள்ளையாரை வழிபட்டும், அங்கு உள்ள குடிநீர் ெதாட்டியில் குடிநீர் குடித்துவிட்டும் இளைப்பாறி விட்டும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த அரச மரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விழுதுகள் கீழ் நோக்கி வந்த வண்ணமாக இருந்தன. இந்த விழுதுகளில் சிறுவர்கள் விளையாடி விழுதுகளை உடைத்தும் நாசம் செய்தும் வந்தனர். இதனால் மேலும் விழுதுகளை உடைப்பதை தடுக்க முடிவு செய்த பெரியதாங்கல் கிராம மக்கள் வித்தியாசமாக யோசித்தனர்.அரச மரவிழுதுகளை பாதுகாக்க ஆங்காங்கே வெட்டப்பட்ட பனைமரங்களை விழுதில் வைத்து பாதுகாத்துள்ளனர். அந்த விழுதுகள் தற்போது தரைவரையிலும் சென்று பனைமரங்கள் பிளந்து காட்சியளிக்கிறது. அரசமர விழுதுகளை பாதுகாக்க பனைமரங்களை நட்டு வைத்துள்ளதை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories: