அரிமளம் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

அரிமளம்,மே 25:.அரிமளத்தில் நடைபெற்ற அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனார், பாலுடை அய்யனார் கோயில் வைகாசி மாத  5 நாள் திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோயிலில் சாமி திருவிழா மண்டபம் வருதல், வைகாசி விசாகம்,சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான  குதிரை எடுப்பு திருவிழா நேற்று மாலை 6மணிக்கு நடந்தது. இதற்காக அரிமளம் அய்யனார் வீதியில் உள்ள மது வீட்டில் வைத்து அய்யனார் சிலைகள் மலர், கலர் பூச்சுகளால்அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பந்தல் ஏறி குதித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்துகோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சேத்து மேல் செல்ல அய்யனார், பாலுடை அய்யனார் சிலைகள், வெள்ளி குதிரை புஷ்ப வாகனத்தில் வைத்து காளை மாடுகள் மூலம் வீதி உலா எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே பக்தர்கள் களி மண்ணால் செய்யப்பட்ட குதிரை சிலைகளை சுமந்து சென்றனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்  செய்தனர்.பட விளக்கம்…அரிமளம் குதிரை எடுப்பு 1,2,3அரிமளத்தில் நடைபெற்ற குதிரை எடுப்பு விழாவில் சேத்து மேல் செல்ல அய்யனார், பாலுடை அய்யனார் வெள்ளி குதிரை , புஷ்ப வாகனத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: