ஆம்பூர் அருகே குண்டு வெடித்து மான் பலியான வழக்கில் ஒருவர் கைது

ஆம்பூர், மே 25: ஆம்பூர் வனச்சரகம் அருகே ஜமீன் கிராமம் உள்ளது. கடந்த 19ம் தேதி வனப்பகுதியிலிருந்து தவறி விவசாய நிலத்திற்கு ஒரு புள்ளி மான் வந்தது. அப்போது அங்கு வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை மான் கடித்ததில் வாய் பிளந்து ரத்தம் கொட்டியது. தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலியே மான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வேலூர் வன மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆம்பூர் அடுத்த குளிதிகை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன்(40) என்பவரை நேற்றுமுன்தினம் இரவு தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஆம்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: