இளம்பிள்ளை அருகே அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

இளம்பிள்ளை, மே 23:  இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தில், அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், இடங்கணசாலை பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை அதிகமாக இருந்து வருகிறது. கடும் வறட்சியால் குடிநீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீர் தட்டுப்பாடு குறித்து மக்களிடம் புகார் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் குடிநீரை மக்கள் அனைவருக்கும் கிடைக்க, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் கேட்டு கொண்டார். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரபாகரன், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இடங்கணசாலை 14வது வார்டு சிவசக்தி நகர் பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் குடிநீரை விற்பனை செய்து வந்ததையடுத்து, அவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: