திருமூர்த்திமலையில் காவலர்கள் இல்லாத புறக்காவல்நிலையம்

உடுமலை, மே 21:உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபடுவதற்காக பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது, சுற்றுலா வாகனங்களால் திருமூர்த்திமலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல் தடுக்கவும் இங்கு புறக்காவல் நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. கோயில் அலங்கார மண்டபம் அருகே இந்த காவல்நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த காவல்நிலையத்தில் போலீசார் யாரும் நியமிக்கப்படவில்லை. வெறும் போர்டு மட்டுமே உள்ளது.  எனவே, உடனடியாக புறக்காவல்நிலையத்தில் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: