83 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

 

கோவை, ஜூன் 12: கோவை மாவட்டத்தில் 83 நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் இலவசமாக விவசாய பயன்பாட்டிற்கு எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலன் கருத்தி மண், வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்படும். சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு விவசாய நில மேம்பாட்டு பணிளுக்காக மண், வண்டல் மண் எடுக்க அனுமதி தரப்படும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

The post 83 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: