தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஜூன் 14: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கநாதமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கபாசு, மாவட்ட பொருளாளர் ராஜாத்தி முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாட்டில் உள்ள கலெக்டர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அரசு அமல்படுத்தி வரும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் தமிழக அரசின் அரசாணையை பின்பற்றாமல், சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆணையின்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட்டு, ஆசிரியர்களின் விருப்பத்தின் படி, முன்பு இருந்ததுபோல் வருமாவரி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: