கந்தர்வகோட்டை அருகே குழந்தைகள் காப்பக பங்களாவில் 2வது முறையாக சீல் உடைப்பு போலீஸ் விசாரணை3

கந்தர்வகோட்டை,மே 21: கந்தர்வகோட்டை அருகே பூட்டி சீல்வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பக பங்காளா 2வது முறையாக மர்ம நபர்கள் சீலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையம் என்ற பெயரில் தனியார் அமைப்பினர் குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படியே அவர்களுக்கு தங்க இடமும், உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அமைப்பு முறையாக அனுமதி பெறாத காரணத்தினாலும் மேலும் பெண்களை பாலியியல் ரிதியாக துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில் 2012ல் மாவட்ட நிர்வாகம் சார்பாக அக்கட்டிடத்திற்கு சீல் வைத்தது. இந்நிலையில் சீல் வைத்தபிறகு மர்ம நபர்கள் சீலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அதை அப்போது பார்த்து அரசு நிர்வாகத்தினர் மீண்டும் அக்கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

தற்போது இரண்டாவது முறையாக சீல் வைத்த கட்டிடத்தில் மர்ம நபர்கள் புகுந்து எதை எடுத்து சென்றனர் என தெரியவில்லை. உள்ளே இருக்கும் பீரோக்கள் கலைக்கப்பட்டு கிடக்கின்றன. ஏற்கனவே  குழந்தைகள் காப்பக மையத்தை நடத்தியவர்கள் வெளிநாடுகளில் நிதிபெற்று மோசடியில் ஈடுபட்டதும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. அவர்களுடைய ஆட்களே உள்ளே புகுந்து பொருட்களை ஏற்கனவே எடுத்து சென்றதுபோல் தற்போதும் சென்றிருக்கலாம் என அப்பகுதியில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மர்ம நபர்கள் மர்ம பங்களாவின் உள்ளே கதவை உடைத்து புகுந்துள்ளனர். இதுகுறித்து விஏஓ கருப்பையா கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்படி போலீசார் நேற்றுமுன்தினம் மர்ம பங்களாவின் உள்ளே சென்று சோதனை செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: