அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

கடலூர், மே 21: 2019-20 ஆம் கல்வி ஆண்டில் சிதம்பரம் அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்நிலையத்தை பொறுத்தவரை எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினருக்கும் சில இடங்கள் உள்ளன. பிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏர்கன்டிஷன் மெக்கானிக், ஒயர்மேன் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகள் சிதம்பரத்தில் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையம் வந்து இங்குள்ள உதவி மையத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதர அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோர் மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பம் என தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும், பயிற்சிக்கட்டணம் எதுவும் இல்லை. பயிற்சி காலத்தில் அனைவருக்கும் மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள்,வரைபடக்கருவிகள், காலணி மற்றும் சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாளாகும். மேலும் தொடர்புக்கு, 04144 - 228900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: