சூலூர் தொகுதியில் 106 பேருக்கு தபால் வாக்குகள்

கோவை, மே 19: கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் 106 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு கிடைக்கும் வகையில் தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூலூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சூலூர் தொகுதியை சாராத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1500 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதே போல் சூலூர் தொகுதியில் இருந்தும் அரசு ஊழியர்கள் பிற மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்கு சென்றுள்ளனர்.

சூலூர் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 இதர வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியை சேர்ந்த வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படுகிறது. அதன்படி சூலூர் தொகுதியில் 106 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வியாழக்கிழமை வரையிலும் 16 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிக்கு கிடைக்கும் வகையில் தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: