நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி இன்ஸ்பெக்டரிடம் விஏஓ தகராறு: வீடியோ வைரலால் பரபரப்பு

கும்பகோணத்தில்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பவுண்டரீகபுரம் விஏஓவாக இருப்பவர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் தஞ்சை சாலையில் ஆயிகுளம் பகுதியில் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன், நோ பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த விஏஓவின் காரை எடுக்காதவாறு சக்கரத்தை லாக் செய்து விட்டு சென்று விட்டார்.இதையடுத்து சாப்பிட்டு விட்டு திரும்பி வந்த விஏஓ சுரேஷ், தனது கார் டயரை போலீசார் பூட்டி இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து  இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.அந்த வீடியோவில், விஏஓ சுரேஷ், ‘‘எஸ்.பியை வேண்டுமானாலும் வரச்சொல் பார்த்துக் கொள்ளலாம். ஆர்‌.ஐ என்னிடம் ரூ.2,000 வாங்கினார். பத்து நிமிடத்தில் என்னுடைய வண்டி லாக்கை எடுக்கவில்லை என்றால் தானாக எடுக்க வைப்பேன்’’ என அதிகார தோரணையில் பேசி அங்கு இன்ஸ்பெக்டருடன் வந்த ஒரு காவலரின் இரு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி வீசுவது பதிவாகி உள்ளது.இதுகுறித்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளிபிரியா, கும்பகோணம் தாசில்தார் ஆகியோரிடம், விஏஓ சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்பெக்டர் சரவணன் புகார் அளித்துள்ளார்….

The post நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி இன்ஸ்பெக்டரிடம் விஏஓ தகராறு: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: