உத்தரவை மதிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள்

25 சதவீத இட ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் குழந்தைகளை சேர்க்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்தாண்டு இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களிடம் கேட்டபோது, தமிழக அரசின் உத்தரவு, எங்களுக்கு பொருந்தாது என்று மறுத்துவிட்டனர். இதனால் எந்தவொரு மாணவருக்கும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 25சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைத்ததாக தெரியவில்லை.

நடப்பாண்டில் இது குறித்து தமிழக கல்வித்துறை ெதளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், அரசு உத்தரவை மதித்து, தங்கள் பள்ளிகளில் 25சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கலாம் என்ற அறிவிப்பை கூட,  சிபிஎஸ்இ பள்ளிகள் வைக்கவில்லை. எனவே அரசின் உத்தரவு, இந்த பள்ளிகளுக்கு ஏன் பொருந்தவில்லை? என்பதை ெதளிவாக விளக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: