வேம்பார் அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு

குளத்தூர்,மே 15: வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடந்தது. வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2011 மற்றும் 2012ம் ஆண்டு பிளஸ்2 பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கடற்கரைவேல், பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு ஆகியோர் தலைமை வகித்து பேசினர். ஆசிரியர்கள் டேவிட், ஜெயதேவ், சதீஷ்குமார், கிரேஸ்ஹேத்சிபாய், ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார். ஆசிரியர் மயில்ராவணன், ஆசிரியைகள் அன்னசுந்தரி, அருணாசகாயராணி, சுஜா ஆகியோர் வாழ்த்திபேசினர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ10ஆயிரம் மதிப்புள்ள பீரோ பள்ளிக்கு வழங்கினர். பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஹேமந்த்குமார், மாரிச்செல்வம், பாலகணேஷ் ஆகியோர் பேசினர். பழைய மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: