வாழப்பாடி பகுதியில் தொடர் மின்வெட்டு

வாழப்பாடி, மே 15:  சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான வாழப்பாடி கொட்டவாடி, புதுப்பாளையம், சின்ன கிருஷ்ணாபுரம், பேளூர், துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி உள்பட பல கிராமங்களில், கடந்த சில நாட்களாக தினமும் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

Advertising
Advertising

கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல் மக்கள் சிரமப்படும் வேலை, மின்தடையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மரத்தடியில் தஞ்சமடைகின்றனர். விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்தடையை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: