பேராவூரணி அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்கல்

பேராவூரணி, மே 15: பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கட்டணமில்லா பிறப்பு சான்று வழங்கப்பட்டது.  அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு கட்டணமில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த ஓராண்டாக முக்கிய நகரங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆரலூரை சேர்ந்த கமல்ஹாசன்- சிநேகா தம்பதிகளின் பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்திருந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் காந்தி, குழந்தையின் தந்தையிடம் பிறப்பு சான்றிதழை வழங்கினார். முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.
Advertising
Advertising

Related Stories: