ஈஐடி பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்

நெல்லிக்குப்பம், மே 14:  நெல்லிக்குப்பம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தாஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மெய்யழகன் வரவேற்றார். நகர செயலாளர் மகேந்திரன், நகர தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் வனராசு, குருமூர்த்தி, நுகர்வோர் குழு ஜெயச்சந்திரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். நிகழ்ச்சியில் நுகர்வோர் சங்க தலைவர்கள் செல்வம், ராமமூர்த்தி, மருத்துவ பயிற்சி இயக்குனர் வெங்கடேசன், காந்தி சமுதாய நிர்வாகி ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதை கண்டித்து கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் விரைவில் நடத்தப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மழைநீர் வடிகால் வாய்க்கால்களை துப்புரவு ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்வதில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: