விவசாயிகள் கவலை கம்பம் மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்

கம்பம், மே 14:உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மெழுகுவர்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு, செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை நினைவுகூறும் நாள் உலக செவிலியர் தினம். செவிலித்தாய் முறையை உருவாக்கிய கைவிளக்கேந்திய காரிகை என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாள் உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறது.

இதையொட்டி நேற்றுமுன்தினம் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில், உலக செவிலியர் நாள் கொண்டாடப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி தலைமையில் ஆண்,பெண், செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனை வாசலில் நின்று செவிலியருக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் மருத்துவ மனையில் உள்ள ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்திற்கு குத்துவிளக்கேற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: