நீடாமங்கலம் மடப்புரம் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு

நீடாமங்கலம், மே 14: நீடாமங்கலம் அருகில் மடப்புரத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மடப்புரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ேகாலாகலமாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வர்.

இந்தாண்டு 18ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், மாலையில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், கஞ்சி வார்த்தல், பால் குடம், காவடி, கரகம், மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் வேண்டுதலின் பேரில் நிறைவேற்றினர். 9 நாட்கள் நடந்த திருவிழா நிகழ்ச்சிகள் நேற்று மஞ்சள் நீர் விளையாட்டு, காப்பு அறுத்தல், விடையாற்றி நிகழ்ச்சியுடன் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்ம ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

Related Stories: