மவுனிகா திரைப்பட பாடல் வெளியீட்டு விழா

கோவை, மே 8: கோவை சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தில் உள்ள எஸ் ஸ்டூடியோவில் மவுனிகா திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சம்பத்குமார், ப்ரியா சம்பத்குமார் மற்றும் திரையுலக பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து சம்பத்குமார் கூறுகையில், ‘’இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனாக ரூபேஷ், நாயகியாக அர்ச்சனா சிங், லிவிங்ஸ்டன், தேவி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் 3 பாடல்கள் உள்ளன. படத்திற்கு கவுதம சந்திரன் சிறப்பாக இசை அமைத்துள்ளார். இது வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் மாறுபட்டதாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. படத்தின் கதை தான் இதன் சிறப்பம்சம். தற்போது, படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: