சிங்கா நல்லூர் பகுதியில் நாளை மின் தடை

கோவை,ஜூன்6: கோவை அருகே ஒண்டிபுதூர் மற்றும் சிங்காநல்லூர் கோவை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (7 ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் ரோடு,பாரதிநகர்,சக்தி நகர்,ஜோதி நகர்,ராமானுஜா நகர்,நீலி கோணம் பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்சி,உப்பிலிபாளையம்,பாலன் நகர்,சர்க்கரை செட்டியார் நகர் ,என்ஜிஆர்நகர்,ஹோப்காலேஜ் முதல் சிவில் ஏரோ,வரதராஜபுரம்,நந்தா நகர்,ஹவுசிங் யூனிட்,ஒண்டிபுதூர் ஒரு பகுதி,மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு,இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

The post சிங்கா நல்லூர் பகுதியில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.