மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

 

மதுக்கரை, ஜூன் 2: கோவை ஈச்சனாரி எல்லன் அண்ட் டி பைபாஸ் ரோட்டிலுள்ள பேக்கரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசாருடன் அங்கு சென்ற எஸ்.ஐ. இளவேந்தன் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரிக்கும்போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரிடம் மேலும் விசாரணை செய்ததில், அவர் குறிச்சி காந்திஜி ரோட்டில் வசிக்கும் ராஜேந்திர பிரசாத் (59) என்பதும், கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்திருப்பதும், ஏற்கனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதற்காக, காட்டூர், போத்தனூர், குனியமுத்தூர், சாயிபாபா காலனி, சூலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து, மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: