மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல்: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

 

வால்பாறை, ஜூன் 8: வால்பாறை பகுதியில் தொடரும் பருவமழை சாரலால் ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து உயிர் பிடித்து உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.அவ்வப்போது பெய்து வரும் மழையால் நகர் மற்றும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புகளில் குளிர் நிலவுகிறது. சாரல் மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.சிற்றோடைகள், காட்டாறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.

எனவே மான்கள்,காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்துள்ளது. பருவமழையால் முளைத்துள்ள புதிய புற்களை வனவிலங்குகள் ருசித்து பசியாறி வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி சோலையார் அணைக்கு 199.8 கன அடி நீர் வரத்து உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 20 கன அடி நீர் வெளியேறுகிறது.160 அடி உயரம் உள்ள சோலையார் அணையில் 40.3 அடி நீர் மட்டம் உள்ளது. இந்நிலையில் வால்பாறை 37மிமீ. சோலையார் அணை30மி.மீ, மேல்நீரார் 67மி.மீ, கீழ்நீரார் 32 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல்: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: