பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொறுப்பேற்பு

பெரம்பலூர், மே 3: பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக லிங்கேஷ்வரன் பொறுப்பேற்றார். பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக கடந்த 2 ஆண்டுகளாக பாலராஜமாணிக்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றதால் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் பணிமாறுதல் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து லிங்கேஸ்வரன் நேற்று காலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசோக் பிரஷாத், கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான சார்பு நீதிபதி வினோதா, அரசு வழக்கறிஞர்கள் கணேசன், வினோத்குமார் மற்றும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: