திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

திருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்து வந்த சித்திரை திருவிழா நிறைவுபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் பிறவி மருந்தீஸ்வரர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கடந்த 16ம் தேதி தேரோட்டமும், 23ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு உபயதாரர் நெடும்பலம் அன்னபூரணி ரைஸ்மில் சார்பில் மருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதன் பின்னர் துவஜாவரோகணம் பஞ்சமூர்த்தி வீதியுலாவுக்கு பின்னர் கொடியிறக்கப்பட்டு சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.

Related Stories: