ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் வங்கி தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம், ஏப்.26: சேலம் ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் வங்கி தேர்வுக்கான, இலவச பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி 28ம் தேதி நடக்கிறது. இந்தியா முழுவதும் வங்கி பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஐபிபிஎஸ் மூலம், ஆயிரக்கணக்கான வங்கி பணியிடங்கள் நிரப்பபட்டு வருகின்றன. எனவே, இத்தேர்வுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டங்கள் குறித்து விவரங்களை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. சேலம் ரேஸ் பயிற்சி நிறுவனம் வங்கித்தேர்வுகள் குறித்த அனைத்து விவரங்களையும், விண்ணப்பதாரர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், சேலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகில் உள்ள சென்னை ரேஸ் பயிற்சி நிறுவனம் கிளையில் நடைபெற உள்ளது.

ரேஸ் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்த அதிகாரிகள், தாங்கள் பின்பற்றிய கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், பொது அறிவு, கணிதம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்வது பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். ரேஸ் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களும், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து ெகாள்ளும் அனைவருக்கும் நடப்பு நிகழ்வுகள் அடங்கிய கையேடு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.சேலம், ஏப்.26: சேலம் ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் வங்கி தேர்வுக்கான, இலவச பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி 28ம் தேதி நடக்கிறது.

இந்தியா முழுவதும் வங்கி பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஐபிபிஎஸ் மூலம், ஆயிரக்கணக்கான வங்கி பணியிடங்கள் நிரப்பபட்டு வருகின்றன. எனவே, இத்தேர்வுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டங்கள் குறித்து விவரங்களை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. சேலம் ரேஸ் பயிற்சி நிறுவனம் வங்கித்தேர்வுகள் குறித்த அனைத்து விவரங்களையும், விண்ணப்பதாரர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், சேலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகில் உள்ள சென்னை ரேஸ் பயிற்சி நிறுவனம் கிளையில் நடைபெற உள்ளது.

ரேஸ் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்த அதிகாரிகள், தாங்கள் பின்பற்றிய கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், பொது அறிவு, கணிதம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்வது பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். ரேஸ் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களும், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து ெகாள்ளும் அனைவருக்கும் நடப்பு நிகழ்வுகள் அடங்கிய கையேடு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: