கந்தர்வகோட்டையில் பெங்களூரு ரோஸ் செடிகள் விற்பனை ஜோர்

கந்தர்வகோட்டை, ஏப்.25:  கந்தர்வகோட்டையில் ரோஸ் செடிகள் விற்பனை அமோகமாக நடந்தது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தங்களது வீடுகளில் பெரும்பலான மாணவர்கள், பொதுமக்கள் பூச்செடிகளை வளர்க்க அதிகளவில் விரும்புவர். குறிப்பாக பெண்கள் செடிகள் வளர்ப்பதில் அதிகளவில் ஆர்வம் காட்டுவர். இதை கவனத்தில் கொண்டு கந்தர்வகோட்டையில் வியாபாரிகள் அதிகளவில் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து ரோஸ் செடிகளை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். சிகப்பு, ரோஸ், மஞ்சள், வெள்ளை என பல கலர்களில் ரோஸ் செடிகள் விற்பனை செய்யப்பட்டன. பலவண்ணமயமான ரோஸ் செடிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஒரு ரோஸ் செடி ரூ.40ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: