பெண்களை தரக்குறைவாக பேசி ஆடியோ வெளியீடு பெண்ணை கைது செய்யக்கோரி மனு கொடுக்க திரண்ட மக்கள் போலீஸ் குவிப்பால் திருமயத்தில் பரபரப்பு

திருமயம், ஏப்.25: அரிமளம் அருகே ஒருகுறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி ஆடியோ வெளியிட்ட பெண்ணை கைது செய்யகோரி மனு கொடுக்க மக்கள் திரண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் அதிகளவு வாழும் ஒருகுறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் கடந்த வாரம் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட சமூதாயத்தினர் நடத்திய போராட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செய்தி பரவிய நிலையில், பிரச்னை மேலும் பெரிதானது. இதனால் அதிகாரிகள் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர பொன்னமராவதி சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிரபித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பகுதியில் இயல்பு நிலைதிரும்பி வரும் நிலையில் சர்ச்சைக்குறிய ஆடியோ வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னை அடங்குவதற்குள் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் பனம்பட்டியில் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரிமளம் அருகே உள்ளகே.புதுப்பட்டி பகுதியில் அதிகளவு வாழும் ஒருகுறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி ஒருபெண் சமூகவலை தளங்களில் ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுஅப்பகுதி இளைஞர்களிடம் கொத்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தசம்பவம் அப்பகுதியில் புதுவிஸ்வரூபம் எடுத்துள்ளதால் போலீசாருக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கல்லூரைச் சேர்ந்த பெரியசாமியிடம் கேட்ட போது: முத்திரையர் சமூதாய பெண்களை தரக்குறைவாக பேசியதாக பாதிக்கப்பட்ட சமூதாயத்தினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பனம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தின்போது இந்த பிரச்னையில் எந்த சம்பந்தமும் இல்லாத  சமூதாய பெண்களை முத்திரையர் சமூதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறாக பேசிவெளியிட்ட ஆடியோ சமூகவலை தளங்களில் உலாவிவருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட பெண் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கே.புதுப்பட்டி காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மனுகொடுக்க வந்தோம். அங்கு போலீசார் யாரும் இல்லாத நிலையில் நாளை (புதன்கிழமை) ஊர் மக்களை திரட்டி மனு கொடுக்க வருகிறோம் என எச்சரித்து சென்றோம்.

இதனை தொடர்ந்து நேற்று எங்கள் சமுதாய மக்களுடன் மனுகொடுக்க கே.புதுப்பட்டிபோலீஸ் ஸ்டேசனுக்கு சென்றோம். ஆனால் போலீசார் சிலகுறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதித்து புகார் மனுவை பெற்று கொண்டனர். சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சமுதாய மோதல்களை ஏற்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆடியோ வெளியிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு:

ஏற்கனவே பொன்னமராவதியில் மனுகொடுக்க சென்றபோது ஏற்பட்ட திடீர்கலவரம் ஊரடங்கு உத்தரவுவரை சென்றதால் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் பீதியடைந்துள்ளனர். இது போன்ற கலவரங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒருகுறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்த சுமார் 500பேர் திரண்டு சர்ச்சைக்குறிய ஆடியோ வெளிட்ட பெண்ணை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கே.புதுப்பட்டி ஸ்டேசனுக்கு மனு கொடுக்க வருவதாக தகவல் பரவியது.இதனால் அலார்ட் ஆனா போலீசார் மாவட்ட எஸ்பிசெல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டபோலீசை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியோடு கலவரம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிகை நடவடிக்கையாக தண்ணீர்பீச்சி அடிக்கும் வாகனம் வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த திடீர் போலீஸ் குவிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: