மஞ்சினி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில் தீமிதி விழா

ஆத்தூர், ஏப்.25: ஆத்தூர் ஒன்றியம் மஞ்சினி கிராமத்தில், புற்றுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வந்தது. விழாவின் முக்கிய நாளான ேநற்று, பொங்கல் வைத்தலும், மதியம் 2மணி அளவில் அலகு குத்தும் நிகழ்ச்சியும், மாலை 5மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், மஞ்சினி, ஆத்தூர், தெடாவூர், ஒதியத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில், டவுன் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: