ஆத்தூர் நகர பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் ேபாக்குவரத்து பாதிப்பு

ஆத்தூர், ஏப்.25: ஆத்தூர் நகர பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆத்தூர் நகரத்தின் பிரதான பகுதிகளான ராணிப்பேட்டை, கடைவீதி, உடையார்பாளையம், ஸ்டேட் பங்க் சாலை, காமராஜனார் சாலை ஆகிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள், அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினசரி மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் ராணிப்பேட்டை கடைவீதி பகுதியில், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த ராணிப்பேட்டை கடைவீதியில் எப்போதும், மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படும்.

மேலும் பேருந்து நிலையத்தின் வெளிப்புற வாயிலின் அருகே இரு வர்த்தக வங்கிகள் மற்றும் ஏராளமான மொத்த வியாபார நிறுவனங்கள் உள்ளதால் இந்த பகுதியில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மக்கள், தங்களின் வாகனங்களை பிரதான சாலைகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை போக்குவரத்து ேபாலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆத்தூர் வளர்த்து வரும் நகரமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதை தடுக்க, போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதிகளை ஏற்படுத்த ேவண்டும் என்றனர்.

Related Stories: