தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்து கிடக்கும் ஊர் பெயர் பலகைகள் அதிகாரிகள் அலட்சியம்: சுற்றுலா பணிகள் அவதி

புதுக்கோட்டை,ஏப்.24: புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுஞ்சாலையத்துறையின் அலட்சியத்தால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர் பலகை சாலையில் ஆங்காங்கே சாய்ந்து துருபிடித்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னாவாசல், குடிமியான்மலை, திருமயம் கோட்டை, ஆவுடையார்கோயில், பொற்பனைகோட்டை, திருவரங்குளம் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளது. இந்த சுற்றுலா இடங்களுக்கு உலக நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக பெயர் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது.

பச்சை கலரில் வைக்கப்பட்ட அந்த பெயர் பலகையில் அந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு ஊரின் தூரம் எழுதப்பட்டு இருக்கும். மேலும் அந்த இடத்தில் இருந்து இடது புறம் சென்றால் எந்த ஊர், வலது புறம் ஊர் சென்றால் எந்த ஊர் செல்லும் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா வாசிகள் சிரமமின்றி சென்று வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் காரணமாக அனைத்து மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் இன்றி வெறுச்சோடி காணப்படுகிறது. புயலின்போது சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெருவாரியான பெயர் பலகைள் கீழே விழுந்தும், சில இடங்களில் காற்றில் அடித்தும் சென்றுள்ளது.

இதனால் வெளியூர் பயணிகள், சுற்றுலா பயணிகள், வெளியூர் வகான ஓட்டிகள் புதுக்கோட்டையில் இருந்து எந்த ஊருக்கு எப்படி செல்ல முடியும் என்பது தெரியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் தெரிந்தவர்களிடம் போனில் தொடர்ப்பு கொண்டு அவர்கள் சொல்லும் வழியில் வந்து செல்கின்றனர். கஜா புயலுக்கு பிறகு நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகை குறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். புயலில் கீழே விழுந்த பெயர் பலகைகளை மீடக்காமல் அப்படியே விட்டதால் சாலைகளில் விழுந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது.

இதனால் இனியாவது விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: